×

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை: அதிர்ச்சி தகவல்..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் கடந்த 21ம் தேதி நடந்த என்கவுண்டரின் போது பிடிபட்ட தபரிக் உசேன் என்ற பயங்கரவாதி மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையின் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளது. நவ்சேரா செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து இந்திய பகுதிக்குள் கடந்த 21ம் தேதி ஒருவர் நுழைய முயற்சித்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். ராணுவ வீரர்கள் அருகில் சென்ற போது அவர் ஓட துவங்கினார். பின்னர் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன் பிறகு ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு ஊடுருவல்காரரை மடக்கி பிடித்தனர். இதில் படுகாயமடைந்த அவரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் பயங்கரவாதி தபரிக் உசேன் என்பது தெரிய வந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயங்கரவாதிக்கு ரத்த தானம் செய்து இந்திய ராணுவத்தினர் உதவியுள்ளனர். இந்நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்….

The post இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை: அதிர்ச்சி தகவல்..! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Srinagar ,Tabariq Hussain ,Rajouri ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...